உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஷ்வன்கர் பள்ளி  9வது ஆண்டு விழா 

விஷ்வன்கர் பள்ளி  9வது ஆண்டு விழா 

கோவை:பூலுவபட்டி விஷ்வன்கர் பப்ளிக் பள்ளியின், ஒன்பதாவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி பேசுகையில், ''ஊக்குவிக்க ஆள் இருந்தால், ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார். மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார்.ஆண்டு விழாவில், நடனம், வில்லுப்பாட்டு, தெனாலிராமன் நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, மாணவர்கள் அரங்கேற்றினர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.பள்ளித் தாளாளர் சங்கீதா, இயக்குனர் கதிர்வேல், தலைமை ஆசிரியை பிருந்தா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை