மேலும் செய்திகள்
வீட்டுக்கு வீடு பரிசு: வாக்காளர்களை வளைக்கும் அமைச்சர்
1 minutes ago
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
4 minutes ago
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு
5 minutes ago
மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்
6 minutes ago
தர்மபுரி: அரூர் அருகே, ஏரியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை, வருவாய் துறையினர் கைப்பற்றி விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சங்கிலிவாடி ஏரியில், நேற்று காலை, 10:00 மணிக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் சிதறி கிடந்தன. அப்பகுதியினர் தகவலில், சம்பவ இடத்துக்கு வந்த அரூர் தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய் துறையினர் வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரித்தனர். தாசில்தார் பெருமாள் கூறுகையில், ''ஏரியில், 12 வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. கட்சியினர் யாரோ, உறுப்பினர் சேர்க்கைக்காக, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், புது அட்டைகளை வாங்கி விட்டனர். இதனால், அந்த வாக்காளர் அடையாள அட்டைகளை ஏரியில் வீசி சென்றுள்ளனர்,'' என்றார்.
1 minutes ago
4 minutes ago
5 minutes ago
6 minutes ago