உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணைகளில் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை

அணைகளில் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை

வால்பாறை; பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறை மலைப்பகுதியில் ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் போது, கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைத்து குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்காக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் அணைகள் கட்டப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு பெய்த பருவமழையால், பி.ஏ.பி., திட்ட அனைத்து அணைகளும்நிரம்பின. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், கடந்த, ஐந்து மாதங்களுக்கு மேலாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி நிலவும் நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை இடையிடையே பெய்கிறது. இதனால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன.கோடை மழையும் தற்போது ஓய்வெடுப்பதால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 1.98 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 47.12 அடியாகவும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 63.95 அடியாகவும் இருந்தது. இதனால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !