உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடைபாதை கடைகளை அகற்ற முடியாதாம்! நெடுஞ்சாலை துறையை கைகாட்டும் கமிஷனர்

நடைபாதை கடைகளை அகற்ற முடியாதாம்! நெடுஞ்சாலை துறையை கைகாட்டும் கமிஷனர்

வால்பாறை; வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், மக்கள் நடந்து செல்ல வசதியாக நகராட்சி சார்பில், 11 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக்கம்பியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக நடந்து சென்றனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் நகராட்சி அலுவலகம் முதல் காந்திசிலை வரையில் உள்ள நடைபாதையை, வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் வைத்துள்ளனர். இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும். ஒரு சில வியாபாரிகளின் சுயநலனுக்காக, மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது.மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைக்க, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றனர்.

இது நல்லாயிருக்கே!

நகராட்சி கமிஷனர் ரகுராமனிடம் கேட்ட போது, ''நடைபாதையில் வியாபாரிகள் கடை வைத்திருந்தாலும் அதை நாங்கள் அகற்ற முடியாது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு அதிகளவில் மானியத்துடன் கூடிய கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வரும் நிலையில், கடைகளை அகற்ற வாய்ப்பில்லை. மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால், கடைகள் அகற்றுவது குறித்து அந்த துறையினர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை