உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாருக்கு ஆயுதப்பயிற்சி

போலீசாருக்கு ஆயுதப்பயிற்சி

கோவை,; இரண்டாம் நிலை போலீசாருக்கான, இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள, 183 இரண்டாம் நிலை போலீசாருக்கான ஆயுதப்படை பயிற்சி கடந்தாண்டு, டிச., 4ம் தேதி துவங்கியது. பயிற்சியின் ஒரு பகுதியாக போலீசாருக்கு ஆயுத பயிற்சி, தற்காப்பு பயிற்சி, உளவுத்தகவல் சேமிப்பு, ஸ்னைப்பர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்டது. பயிற்சிகளை, ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் பயிற்சியாளர்கள் அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை துணை முதல்வர் பழனிகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ