உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை; கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது.கல்லுாரி தலைவர் லட்சுமிநாராயணசாமி, தலைமை நிர்வாகி சுகுணா தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம், ஆளுமை பண்பை வளர்த்தல், வேலைவாய்ப்புடன் கூடிய கல்வி, தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ரவிக்குமார் விளக்கமளித்தார்.தொடர்ந்து கல்லுாரி செயல்பாடுகள், விடுதி, ஆய்வகங்கள், நுாலக பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.கல்லுாரி செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லுாரி முதல்வர் ராஜ்குமார், செயலர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ