மேலும் செய்திகள்
கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி
28-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
கோவை; ''மன உறுதியுடன் சிறந்த ஆளுமையாக விளங்க வேண்டும்'' என, எச்.சி.எல்., தொழில் மைய கேம்பஸ் ரிலேஷன்ஸ் இயக்குனர் தலைவர் பிரசாத் பேசினார்.கற்பகம் பல்கலையில் வணிகவியல், மேலாண்மையியல் மற்றும் உயிரி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் துளிர் - 2025 விழா நடந்தது.சென்னை எச்.சி.எல்., தொழில்நுட்ப மையத்தின் கேம்பஸ் ரிலேஷன்ஸ் இயக்குநர் தலைவர் பிரசாத் பேசுகையில்,''இளம் தலைமுறையினர் புதியவற்றை கண்டு அடைவதில் ஆர்வம், தெளிவான செயல்திட்டம், நம்பிக்கை, தொடர் முயற்சி உடன் இருக்க வேண்டும். முயற்சியில் ஏற்படும் தடைகளை முறியடித்து சாதனை படைக்க தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். மன உறுதியுடன் சிறந்த ஆளுமையாக விளங்க வேண்டும்,'' என்றார்.கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயலர் முருகையா துணைவேந்தர் சுப்பன் ரவி, பதிவாளர் பிரதீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
28-Jun-2025
16-Jun-2025