மேலும் செய்திகள்
காந்தியடிகள் காவலர் பதக்கம்
27-Jan-2025
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சின்ன காமணன் உள்ளார். இவர் விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு, குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலின், இவருக்கு உத்தமர் காந்தி விருதை வழங்கினார்.இதையடுத்து, நேற்று மேட்டுப்பாளையம் போலீசார் சார்பில் இவருக்கு மேளதாளம் முழங்க ஆளுயர மாலையிட்டு, கிரீடம் அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. பின் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
27-Jan-2025