உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள்

முப்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள்

கோவை : உடையாம்பாளையம், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், முப்பெரும் விழா நடந்தது. சவுரிபாளையம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுரி சங்கர் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், 100 ஏழைக் குடும்பங்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், அரிசி, மளிகைப்பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய மதநல்லிணக்க தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நுாலக உறுப்பினர் அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.விழாவின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ