உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அழைப்பு; கோவையில் நடக்குது சிறப்பு முகாம்

ஆன்லைன் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அழைப்பு; கோவையில் நடக்குது சிறப்பு முகாம்

கோவை, : ஸ்விக்கி, ஸொமேட்டோ, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் இயங்குதளங்கள் சார்ந்து செயல்படும் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர, தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பால தண்டாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், சமூக பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதில், வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்யும் வகையில், கோவை, ராமநாதபுரம் சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஸ்விக்கி, ஸொமட்டோ, பிளிப்கார்ட் போன்ற இணையதள தொழிலில் ஈடுபட்டுள்ள, 'கிக்'தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்து கொண்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு, திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரண உதவித் தொகை, 60 வயது நிறைவு பெற்றதும் மாத ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் குடும்ப அட்டை, புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், வயதுக்கான ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.அல்லது 04222324988 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். மேலும், www.tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன், தொழிலாளர்களே பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை