மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி
13-Dec-2024
வால்பாறை; வால்பாறை நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என முப்பெரும் விழா, நகர செயலாளர் சுதாகர் தலைமையில் நடந்தது. ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் நடந்த விழாவில், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவில், நகராட்சி கவுன்சிலர் பாஸ்கர், வார்டு செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஸ்டேன்மோர், சவராங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.
13-Dec-2024