உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிடப்பிலான திட்டங்களுக்கு என்ன தீர்வு? கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வாங்க!

கிடப்பிலான திட்டங்களுக்கு என்ன தீர்வு? கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வாங்க!

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி, கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது; ஏப்., 30 வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி, துறை வாரியாக மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. கடந்தாண்டு டிச., மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தபோது, முன்னாள் அமைச்சர் வேலுமணி, வெள்ளலுார் குப்பை கிடங்கால் ஏற்படும் துர்நாற்றம் தொடர்பாக பேசினார்.அதற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பதிலளித்தார். இருந்தாலும், துர்நாற்றப் பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.இதையடுத்து, தற்போது துவங்கியுள்ள சட்டசபை கூட்டத்தில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு, குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'வெள்ளலுார் குப்பை கிடங்கால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு, போர்வெல் தண்ணீர் மஞ்சள் நிறமாகி, பயன்படுத்த முடியாத நிலை, வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை மீண்டும் துவக்க வேண்டும். லாரிப்பேட்டையாக மாற்றும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. வெள்ளலுார் வரை தயாரித்திருந்த 'மெட்ரோ ரயில்' திட்ட வழித்தடம் மாற்றப்பட்டிருக்கிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, இப்பிரச்னைகளுககு தீர்வு காண வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை