உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் வளர்ச்சி பணிகளின் நிலை என்ன! கள ஆய்வில் இறங்கினார் கண்காணிப்பு அலுவலர்

கோவையில் வளர்ச்சி பணிகளின் நிலை என்ன! கள ஆய்வில் இறங்கினார் கண்காணிப்பு அலுவலர்

கோவை; கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வளர்ச்சிப் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வேகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று உக்கடம், புல்லுக்காட்டில் பி.எஸ்.யு.பி., திட்டத்தின் கீழ் ஆசாத், சேரன், சாக்கர், இளகி, பாத்திமா நகர்களிலும் சாரமேடு பகுதிகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் 22.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.மேலும் அல்அமீன் காலனி, ரோஸ் கார்டன், பொன்விழா, அன்பு, ஜி.எம்., நகர்களிலும், ஜே.கே., கார்டன், கோட்டை புதூர் பகுதிகதிகளுக்கு, 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.மேலும், வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் கல்லூரி மாணவியர் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன்,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ