உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வினியோகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வினியோகம்

கோவை: கோவை மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில், நான்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.தமிழக அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று உதவும் வகையில் டி.என்.ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டார களப்பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று, தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இப்பணியின் போது, மாற்றுத்திறனாளிகளின் தேவை குறித்து, பட்டியல் தொகுத்து வைத்திருந்தனர்.இச்சூழலில், கடந்த லோக்சபா தேர்தலின் போது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட சக்கர நாற்காலிகள், பயன்பாடு இன்றி வைக்கப்பட்டு இருந்தன. இதனை, தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேசன் கூறுகையில், ''தேர்தல் சமயத்தில் கொள்முதல் செய்யப்பட்ட, 150 சக்கர நாற்காலிகளை தேவைப்படுபவர்களுக்கு வழங்க, கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி டி.என்.ரைட்ஸ் திட்டத்தில் கண்டறியப்பட்ட பயனாளிகள், 20 பேருக்கு, முதல்கட்டமாக சக்கர நாற்காலி வழங்கினோம். தொடர்ந்து தேவைப்படுபவர்களுக்கும், கோவில்கள், மருத்துவமனைகளுக்கும் வழங்கவுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை