உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டை கடக்கும் போது திக்... திக்...!

ரோட்டை கடக்கும் போது திக்... திக்...!

கருமத்தம்பட்டி:சங்கோதிபாளையம் பிரிவில், விதிமீறி அவிநாசி ரோட்டை கடக்கும் மக்களால், விபத்துகள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோட்டில், கணியூர் டோல்கேட் அடுத்து சங்கோதிபாளையம் பிரிவு, கோழிப்பண்ணை, ஊத்துப்பாளையம் பிரிவு, கொள்ளுப்பாளையம் பிரிவு ஆகிய பஸ் ஸடாப்புகள் இரு புறங்களிலும் உள்ளன.மேற்கண்ட இடங்களில் ரோட்டை கடக்க பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். ரோட்டை கடக்கும் பலர், விபத்தில் சிக்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கோழிப்பண்ணை அருகிலும், ஊத்துப்பாளையம் பிரிவு அருகிலும் இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், ஊத்துப்பாளையம் பிரிவில் மட்டும், மேம்பாலத்தை ஒட்டி பஸ் ஸ்டாப் இருப்பதால், பொதுமக்கள் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு பாதுகாப்பாக ரோட்டை கடந்து செல்கின்றனர். மற்ற இடங்களில், பாதுகாப்பு இல்லாத சூழலில் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது.இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்ட மேம்பாலங்களுக்கு அருகில், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான வழி அமைக்கப்படவில்லை. மேலும், கோழிப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், பஸ் ஸ்டாப்பில் இருந்து துாரத்தில் உள்ளது. அதனால், பஸ்சில் இருந்து இறங்கும் மக்கள், பாதுகாப்பு இல்லாமல் ரோட்டை கடக்கின்றனர்.அதனால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்பாலத்தை கடந்து செல்லும் இடம் அருகே பஸ் ஸ்டாப்பை மாற்றினால், மக்கள் ரோட்டை எளிதாக கடந்து செல்லமுடியும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ