உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு பெண்கள் போனதெங்கே?

இரு பெண்கள் போனதெங்கே?

கோவை: கவுண்டம்பாளையம், கிரிநகர் பகுதியை சேர்ந்த, 22 வயது பெண், பி.இ., படித்து விட்டு வீட்டில் இருந்தார். தோழியருடன் சினிமாவுக்கு செல்வதாக கூறிச் சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. கவுண்டம்பாளையம் போலீசார் தேடுகின்றனர். * தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த, 18 வயதான மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் கண்டித்தனர். வீட்டுக்குத் தெரியாமல், துணிகள், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை