உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யார் அந்த சார்...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது

யார் அந்த சார்...ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது

பெ.நா.பாளையம் : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் நிகழ்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவி போலீசில் அளித்த புகாரில், பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர், சார் என்ற மூன்றாம் நபரை குறிப்பிட்டு இருக்கிறார். அவர் யார் என தெரியவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கரூரில் அ.தி.மு.க.,வினர், 'யார் அந்த சார்' என்ற தலைப்பில் சுவரொட்டி ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி வழங்க கோரி, கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் பஸ் ஸ்டாண்டில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமையில், அ.தி.மு.க.,வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றினர். கைதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 700 பேரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால், கோவை--மேட்டுப்பாளையம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
டிச 31, 2024 18:16

சார் சார் என்றவரை தெரிந்து போச்சு தெரிந்துபோச்சு ஆனால் வெளியே சொல்ல மாட்டான் சார் எனக்கு நல்லாவே தெரியும் சார் அவர்தான் சார் அப்புறம் சொல்றேன் சார் சரியா சார் என்ன குழப்பமா சார்


Muralidharan S
டிச 31, 2024 13:06

அந்த சார் யார் என்று வெளியே வராது அதாவது பொது மக்களுக்கு மட்டும் தெரிய வராது.. அரசியலும் ரவுடிகளும் அப்படி பின்னி பிணைந்து இருக்கிறார்கள்..


Sridhar
டிச 31, 2024 13:06

கமிஷனர் மற்றும் மந்திரிகள் எல்லாம் சேர்ந்து முட்டுக்கொடுக்கும் தீவிரத்தை பார்க்கும்போது அந்த சார் நிச்சயமா சூப்பர் மந்திரியாதான் இருக்கணும். பிடிபட்டா, நீங்க சார்னு நினச்சா நான் சார் போக்கிரி னு நினச்சா நான் போக்கிரி னு சொன்னாலும் சொல்லுவான் அந்த சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை