உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டை விரிவுபடுத்தி பஸ் விடுங்க!

ரோட்டை விரிவுபடுத்தி பஸ் விடுங்க!

உடுமலை, - பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அந்தியூரில், தேசிய நெடுஞ்சாலையில், இணையும் ரோடு பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது.இந்த ரோட்டில், பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, பீக்கல்பட்டி, அந்தியூர் உட்பட கிராமங்கள் அமைந்துள்ளன.விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும், அதிகரித்து வருகின்றன. மேலும், பண்ணைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட, கோழிக்குட்டையில், அரசின் கால்நடை மருத்துவ கல்லுாரி கட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு, அந்தியூர் - கொங்கல்நகரம் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடு, கிராம இணைப்பு ரோடு அளவுக்கு மிக குறுகலாக உள்ளது; அபாய வளைவுகளும் அதிகளவு உள்ளன.இதனால், இரவு நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் வரும் போது, பிற, வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத நிலை உள்ளது. இவ்வழித்தடத்தில், உடுமலையில் இருந்து, ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ரோட்டை விரிவுபடுத்தி, விபத்துகளை தவிர்ப்பதுடன், கூடுதலாக பஸ்களும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.மேலும், உடுமலை, அந்தியூர், கொங்கல்நகரம், அனிக்கடவு வழியாக நெகமத்துக்கும் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி