உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டை விரிவுபடுத்துங்க; மக்கள் கோரிக்கை

ரோட்டை விரிவுபடுத்துங்க; மக்கள் கோரிக்கை

வால்பாறை : அக்காமலையில் இருந்து கருமலை செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. நகராட்சி சார்பில் வாகனங்கள் சென்று வரும் பகுதியில் உள்ள சில எஸ்டேட்களில் ரோடு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள கருமலையில் இருந்து அக்காமலை செல்லும், 5 கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.குறிப்பாக, தேசிய பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதியின் முகப்பு தோற்றம், இங்கு நிலவும் பனிமூட்டத்தையும் காண சுற்றுலா பயணியர் அதிகளவில் வாகனங்களில் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற பாலாஜி கோவிலும் இந்த வழித்தடத்தில் தான் அமைந்துள்ளது. ஆனால் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால், வளைவுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறியதாவது:நீண்ட கால போராட்டத்திற்குப்பின், நகராட்சி சார்பில் அக்காமலையில் இருந்து கருமலை செல்லும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் இந்த ரோடு மிகவும் குறுகளாக உள்ளது. இதனால் எதிரே வாகனங்கள் வரும் போது, ஒதுங்கக்கூட முடியாமல், விபத்து ஏற்படுகிறது.எனவே பொதுமக்கள் நலன் கருதி, கருமலையில் இருந்து அக்காமலை செல்லும் ரோட்டை நகராட்சி சார்பில் விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை