உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறைந்த பாம்பு பிடி வீரரின் மனைவி குழந்தைகளை காப்பாற்ற கோரிக்கை

மறைந்த பாம்பு பிடி வீரரின் மனைவி குழந்தைகளை காப்பாற்ற கோரிக்கை

கோவை; கோவை, வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை, பட்டியண்ணன் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்,35 சமீபத்தில் பாம்பு பிடித்தபோது, எதிர்பாராத விதமாக கடித்ததில் அவர் இறந்தார்.அவரது மனைவி சரண்யா தனது இரு மகள்களுடன் நேற்று, கலெக்டரிடம் கண்ணீருடன் மனு கொடுத்தார்.அதன் விபரம்: எனது கணவர் சந்தோஷ் குமார், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, மக்கள் அழைப்பின் பேரில், அவர்களது வீடுகளுக்கு சென்று, பாம்புகள் இருப்பதை கண்டறிந்து, அதை சேவை மனப்பான்மையுடன் பிடித்து காடுகளுக்குள் கொண்டு சென்று விட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த, 17ம் தேதி தொண்டாமுத்தூரிலுள்ள குடியிருப்பு ஒன்றினுள் பாம்பு பிடிக்க முயன்றபோது, பாம்பு கடித்து இறந்தார்.எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பெண் குழந்தை. இன்னொரு குழந்தை மாற்றுத் திறனாளி. வருமானத்துக்கு வழியில்லாமலும், குழந்தைகளை கவனிக்க முடியாமலும், சொந்தமாக வீடு இல்லாாமலும் சிரமப்பட்டு வருகிறேன். எனது குடும்பத்துக்கு, தமிழக அரசு நிதி உதவி செய்து, எங்கள் வறுமையை போக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ