காட்டு பன்றி தங்கும் இடங்கள் ஆய்வு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. கிழங்கு வகைகள் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவு சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், கிழங்கு வகை பயிர்களை நடவு செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பலமுறை மனு கொடுத்ததை தொடர்ந்து வனத்துறையினர் கோதவாடி பகுதியில் காட்டுப்பன்றிகள் தங்கும் இடங்களை கள ஆய்வு செய்தனர். இப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை விரைவில் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.