உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானை உயிரிழப்பு

காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உடல் நலம் குன்றிய பெண் காட்டு யானை, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.சிறுமுகை வனச்சரகம் ஓடந்துறை வனப்பகுதி லிங்காபுரம் அருகே, விவசாய நிலத்தில் நேற்று முன் தினம் 25 வயதுடைய பெண் யானை எழ முடியாமல் படுத்திருந்தது குறித்து, சிறுமுகை வனத்துறையினர், மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் ஆய்வு செய்து, சிகிச்சை அளித்தனர். 2வது நாளாக நேற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. யானையின் உடற்கூறு ஆய்வு இன்று நடக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி