உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகள் இடித்து வீடு, கோவில் சேதம்

காட்டு யானைகள் இடித்து வீடு, கோவில் சேதம்

வால்பாறை; வால்பாறை அருகே, கெஜமுடி, கவர்க்கல், பச்சமலை, கருமலை, நல்லமுடி, குரங்குமுடி, தாய்முடி, வாகமலை, வில்லோனி, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கெஜமுடி எஸ்டேட் எல்.டி., டிவிஷன் பகுதிக்கு நள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தின் முன்பக்க நுழைவுவாயிலை சேதப்படுத்தின. அதன்பின், தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி, உணவு பொருட்களை தேடின. யானை வீட்டுக்கதவை உடைப்பதை அறிந்த தொழிலாளர்கள், பின் பக்க வழியாக வெளியேறி, அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், ஜெயந்தி, மேகலா, ஆனந்தகுமார், முருகன், பாண்டின் ஆகிய தொழிலாளர்களின் வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகளால், தொழிலாளர்கள் துாக்கமின்றி தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ