உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு சுவர்களில் போஸ்டர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசு சுவர்களில் போஸ்டர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு சுவர்களில், போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி நகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர்கள், அரசு அலுவலக வளாக சுற்றுச்சுவர்களில், சினிமா, தனியார் நிறுவனம், அரசியல் சார்ந்த போஸ்டர்கள் அதிகப்படியாக ஒட்டப்படுகின்றன. இதனால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் சுவரில், போஸ்டர் ஒட்டப்படுவதால், சுகாதாரமான நிலை மாறி விடுகிறது. இரவு நேரத்தில், போஸ்டரை ஒட்டிச் செல்கின்றனர். அதே போன்று, நகரில், அரசு சுவர்கள், பள்ளி வளாக சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்பட்டு அலங்கோலமாக மாற்றப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, போஸ்டர்கள் ஒட்டுவதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிமுறை மீறுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும். அரசு சுவர்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுத்து நகரின் அழகை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ