உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பல்லடம் ரோடு விரிவாக்கம் செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

 பல்லடம் ரோடு விரிவாக்கம் செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு --- பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில், ரவுண்டானா அமைக்கும் நிலையில் தேர்நிலையம் வரையிலான சாலையையும் விரிவுபடுத்தலாமே என, மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்னர், முக்கிய வழித்தடங்கள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டன. அதன்படி, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக, இருபுறமும் தலா, 11 மீட்டர் என, மொத்தம், 22 மீட்டருக்கு ரோடுகள் விரிவுபடுத்தப்பட்டன. ஆனால், வாணியர் மடம் முதல் நியூஸ்கீம் ரோடு வரையிலான ரோடு குறுகலாகவே உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த சாலையில் நாளுக்குள் நாள் அதிகரிக்கும் வணிக கடைகள் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் கூறியதாவது:பல்லடம் ரோடு - நியூ ஸ்கீம் ரோட்டில், ரவுண்டானா அமைக்கும் பொருட்டு, 1.80 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவ்வாறு இருக்கையில், அங்கிருந்து, தேர்நிலையம் வரையிலான சாலையையும் விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பட்சத்தில், நகரின் எந்தவொரு பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இதேபோல, வால்பாறை ரோட்டை இணைக்கும் முக்கிய வழித்தடங்களிலும், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ