உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருந்து வழங்க தானியங்கி இயந்திரம் விரைவில் செயல்படுத்தப்படுமா?

மருந்து வழங்க தானியங்கி இயந்திரம் விரைவில் செயல்படுத்தப்படுமா?

கோவை:மருந்துகள் வழங்க இயந்திரங்கள் நிறுவும் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என, சுகாதார துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் தினமும் பல ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இவர்களின் நோய் தன்மைக்கேற்ப, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவர்கள் தவிர டாக்டரின் பரிந்துரையின் பேரில், மருந்து உட்கொள்ளும் நோயாளிகளும் மருந்து வாங்க மருத்துவமனைக்கு வருகின்றனர். இவ்வாறு, தினமும் பல ஆயிரம் நோயாளிகள் வருவதால், மருந்துகள் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுகிறது.கூடுதல் ஊழியர்களை பணியமர்த்திய போதும், பல்வேறு பகுதிகளிலும் பிரச்னை தொடர்கிறது. இதைக்கருத்தில் கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை பெற்றுக் கொள்ள, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் மருந்துகள் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை வழங்க, ஏ.டி.எம்., போன்ற இயந்திரங்களை நிறுவ, சுகாதார துறை திட்டமிட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தானியங்கி இயந்திரம் செயல்படுவது எப்படி?

சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒருவரது நோய், அதற்கான மருந்துகள், உட்கொள்ள வேண்டிய காலம், மருந்துகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களும், கம்ப்யூட்டரில் பதிவிடப்படும். இதன் அடிப்படையில், நோயாளிகளின் மருந்து சீட்டில் 'பார்கோடு' பதிவிடப்படும். இயந்திரத்தில் உள்ள திரையில், பார்கோடு காட்டினால் அது தேவையான மருந்துகளை வழங்கும். அதிக நோயாளிகள் வரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், இந்த இயந்திரத்தை நிறுவ திட்டமிடப்பட்டது. அதிக பொருட்செலவு பிடிப்பதால், செலவை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை