மேலும் செய்திகள்
வனவிலங்கு - மனித மோதல்; வனத்துறை எச்சரிக்கை
25-Nov-2025
வால்பாறை: எஸ்டேட் தொழிலாளர்கள் வசிக்கும் வீடு, அவர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்டில், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். குறைவான கூலி வழங்கல், வனவிலங்கு - மனித மோதலால் உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால், தொழிலாளர்கள் தொடர்ந்து எஸ்டேட்டை விட்டு வெளியேறி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், தற்போது,17 ஆயிரத்திற்கும் குறைவான தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளில், 83 ஆயிரம் தொழிலாளர்கள் எஸ்டேட்டில் இருந்து, சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், மூன்று தலைமுறையாக தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, யாருக்கும் சொந்தமாக வீடு கூட இல்லை. அதனால்,பணி நிறைவு பெறும் தொழிலாளர்கள் சொந்தமாக வீடு இல்லாமல் அவதிப்படுகின்றனர். எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சமீப காலமாக எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் தொல்லையாலும், குறைவான கூலி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். எஸ்டேட் பகுதியிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறாமல் இருக்க, வசித்து வரும் வீடுகள் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும். மேலும், வனவிலங்குகளால் தொழிலாளர்கள் பலியாவதை தடுக்கும் வகையில், வனவிலங்கு - மனித மோதலுக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினர்.
25-Nov-2025