உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு தீர்வு கிடைக்குமா?

பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு தீர்வு கிடைக்குமா?

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு அரசு பள்ளி அருகே, சர்வீஸ் ரோட்டோரத்தில் தேங்கிய கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக, சர்வீஸ் ரோட்டோரம் இருக்கும் கால்வாய் நிரம்பி ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுகிறது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.மேலும், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டில் தேங்கியிருக்கும் கழிவு நீர் மற்றும் கால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறுகையில், 'கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் முன், சில நாட்களாக கழிவு நீர் ரோட்டில் தேங்கியுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதால், கழிவுநீர் அரசு பள்ளி அருகே உள்ள கால்வாய் வாயிலாக செல்கிறது. தற்போது, இதுவும் அடைத்து கழிவு நீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதை விரைவாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ