உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

கோவை: கோவை, வேளாண் பல்கலையில் செயல்படும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: வரும் 3ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். மேற்கு மாவட்டங்களில், தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 8 முதல் அதிகபட்சம் மணிக்கு 26 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். மண் அரிப்பைத் தடுக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும். காற்று வேகமாக வீசும் சமயங்களில், களைக் கொல்லி, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை