மேலும் செய்திகள்
போதையில் தகராறு வாலிபர் கைது
27-Nov-2024
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், மது போதையில் கணவன் மனைவி இடையே அடி தடி சண்டை நடந்தது. இதை விலக்கிவிட வந்த பெண் போலீஸிடம் அந்த தம்பதியினர் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்டில், கடந்த 28ம் தேதி, மதுபோதையில் கணவன் மனைவி இருவரும் அடி தடி சண்டையில் ஈடுபட்டனர். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தடுக்க முயன்றனர்.அப்போது அந்த தம்பதியினர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பெண் போலீசார் இச்சண்டையை விலக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த மனைவி, பெண் போலீஸ் ஒருவரின் லத்தியை பிடுங்கி அவர்களையே தாக்க முயன்றார். கணவனும் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபட்டார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பெண் போலீசாரை மீட்டனர். தற்போது பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில், கணவன் மனைவி இருவர் மீதும் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விசாரணையில், தகராறில் ஈடுபட்டவர்கள் ராஜன், அவரது மனைவி மைதீன் பிபி எனவும், நிரந்தர முகவரி இல்லாதவர்கள் எனவும் தெரியவந்தது.
27-Nov-2024