உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்ளிடம் ஆற்றில் பெண் எரித்து கொலை

கொள்ளிடம் ஆற்றில் பெண் எரித்து கொலை

திருச்சி: திருச்சி - சென்னை பைபாஸ் ரோட்டில், கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின், ஒன்பதாவது துாண் அருகே, நேற்று காலை தலை எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. கொள்ளிடம் போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றினர். அந்த பெண்ணுக்கு 40 - 45 வயது இருக்கும். முகம் அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில், உடல் எரியாமல், நிர்வாண நிலையில் கிடந்தது.அந்த பெண்ணை வேறு எங்கோ கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க, கொள்ளிடம் பாலத்தில் வீசி, முகத்தை மட்டும் எரித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள் பற்றிய பட்டியலை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காண முயற்சி நடக்கிறது.இப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன், திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டார். மீண்டும் அதுபோன்றதொரு கொலை நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ