பஸ் சக்கரம் ஏறி பெண் பலி
கோவை; காளப்பட்டி ஸ்ரீ லட்சுமி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி வனஜாமணி, 64. நேற்று காலை கோவிந்தராஜ் மற்றும் வனஜாமணி ஆகியோர் ஸ்கூட்டரில் அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் இரு சக்கர வாகனம் உரசியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வனஜாமணி மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இச்சம்பவத்தில் வனஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.