உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை

நகைப்பறித்த பெண்ணுக்கு சிறை

கோவை, ; கோவை சிவானந்தபுரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரும் மனைவியும் பணிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது பாட்டி சரஸ்வதியை தாக்கி, பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தகவல் அறிந்த வெங்கடேஷ், சரஸ்வதியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடேஷ் வீட்டின் அருகில் உள்ள தீபா, 37 என்பவர் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை