மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
22-Sep-2025
நெகமம்; நெகமம் அருகே, வெள்ளாளபாளையம் பகுதியில் இரும்பு ஷெட்டில் கை வைத்த நபர், மின்சாரம் பாய்ந்து பலியானார். உடுமலையை சேர்ந்தவர் ஜீவானந்தம், இவர், நெகமம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் கோழி பண்ணையில், 3 மாதங்களாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், இரவு நேரத்தில் கம்பெனியில் வேலை பார்த்த போது இரும்பு சீட் மேற்கூறை அமைத்த ெஷட்டினுள் இருந்தார். அப்போது, ெஷட்டில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கம்பியை பிடித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22-Sep-2025