உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவில்பாளையம்: கொட்டகை அமைக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கவுதம், 29. தொழிலாளி. இவரும் இவரது சகோதரர் உள்பட நான்கு பேரும் குரும்பபாளையத்தில் ஒரு கடையின் முன்புறம் கொட்டகை அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். அப்போது ஒரு கம்பியை தூக்கும்போது கம்பியின் மறுமுனை மேலே தாழ்வாக இருந்த மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி கவுதம் இறந்தார். இதுகுறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ