உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்

தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்

கோவை: குனியமுத்துார், திருநகர் காலனியை சேர்ந்தவர் பிரகா சன்,48. ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டையில் தங்க நகை பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில், மேற்கு வங்க மாநிலம், கூக்ளி, சிவப்பூரை சேர்ந்த சஞ்சய் ஹன்ஸ்பா என்பவர், 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரிடம் பிரகாசன், 72 கிராம் தங்கத்தை கொடுத்து, பாலிஷ் செய்ய கூறினார். தங்க கட்டியுடன் சஞ்சய் ஹன்ஸ்பா திடீரென மாயமானார். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ