மேலும் செய்திகள்
நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள்
17-Oct-2025
கோவை: கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை அருகேயுள்ள இடிகரை செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்.48. இவரும், எருக்கம்பெனி,பிரபு நகரை சேர்ந்த பிரகாஷ்,40, என்பவரும் சேர்ந்து கூலி வேலைக்கு சென்றதால் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2022, ஜன., 18ல், பிரகாசை ஓரினசேர்க்கைக்கு சண்முகம் அழைத்துள்ளார். இதற்கு பிரகாஷ் மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், சண்முகத்தை கல்லால் தாக்கி பிரகாஷ் கொலை செய்தார். சாய்பாபாகாலனி போலீசார் விசாரித்து பிரகாசை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷிற்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
17-Oct-2025