பணத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி கவுரவிப்பு
கோவில்பாளையம் : ஏ.டி.எம்.,மில் தரையில் கிடந்த பணத்தை தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார். கோவில்பாளையம், ராமன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 38; தொழிலாளி. இவர் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்காக சென்றார்.அப்போது, அங்கு தரையில் ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இதை பார்த்து, அவர் அங்கு கிடந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். நேர்மை தவறாமல் பணத்தை ஒப்படைத்த ரவிச்சந்திரனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ கவுரவித்து பாராட்டு தெரிவித்தார்.