உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூ மாலை கட்ட இடம் தொழிலாளர்கள் கோரிக்கை

பூ மாலை கட்ட இடம் தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை : கோவை மாவட்ட தலைமை மலர் தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.,), மேயர் ரங்கநாயகியை நேற்று சந்தித்து, மனு கொடுத்தனர்.அவர்கள் கூறியதாவது:மாநகராட்சி பராமரிப்பில் பன்னீர்செல்வம் பூ மார்க்கெட் உள்ளது. அவ்வளாகத்தில் காலியிடம் இருக்கிறது. அப்பகுதியில் பூ மாலை கட்டும் தொழிலை செய்து வருகிறோம். 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 40 ஆண்டுகளாக பூ மாலை கட்டும் தொழிலை செய்து வருகின்றனர். எங்களுக்கு இடம் ஒதுக்கித் தரவில்லை.மார்க்கெட் வளாகத்தில் பூ மாலை கட்டுவதற்கு, இடம் ஒதுக்கித் தர வேண்டும். மார்க்கெட்டில் உள்ள சில கடைகள் மூடிக் கிடக்கின்றன. நாங்கள் தொழிலாளர்கள் என்பதால், வாடகையை குறைவாக நிர்ணயித்து ஒதுக்கித் தர வேண்டுமென முறையிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை