உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் இனப்பெருக்கத்தில் மரபணு பல்கலையில் பயிற்சிப் பட்டறை

பயிர் இனப்பெருக்கத்தில் மரபணு பல்கலையில் பயிற்சிப் பட்டறை

கோவை: கோவை, வேளாண் பல்கலை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் தாவர இனப்பெருக்கத்தில், மரபணு சார் இனப்பெருக்கம் குறித்த பயிற்சிப் பட்டறை நடந்தது.பயிர் இனப்பெருக்கவியலில், எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து, தாவர இனப்பெருக்கும் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன் விளக்கினார்.பயிர் மேம்பாட்டில் மரபணு தேர்வு குறித்து, கனடாவின் வேளாண் மற்றும் வேளாண் உணவு ஆராய்ச்சி விஞ்ஞானி ராஜா ரகுபதி, நவீன விவசாயத்தில் மூலக்கூறு இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் மரபணு வரிசை முறை தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து, உலகளாவிய பகிர்வு ஆய்வக சேவை தலைவர் ராஜகுரு போகர் விளக்கினார்.உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மரபணு உதவி இனப்பெருக்கத்தின் எதிர்காலம் குறித்து, அமெரிக்காவின் ஏ அண்டு எம் அக்ரிலைப் ஆய்வு உதவிப் பேராசிரியர் முருகார்த்திக் ஜெயக்கொடி உரையாற்றினார். தாவர உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, இயக்குநர் செந்தில், பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ