உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் பள்ளியில் உலகத்தரத்திலான பயிற்சிகள்

ரத்தினம் பள்ளியில் உலகத்தரத்திலான பயிற்சிகள்

கோவையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ரத்தினம் கல்விக் குழுமங்களின் ஒரு அங்கமாக, ரத்தினம் இண்டர்நேசனல் பள்ளி சிறப்புற செயல்பட்டு வருகிறது. இதில், உலகத் தரத்திலான பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.திறமையான ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், அட்டல் டிங்கரிங் ஆய்வகம், விரிவான நுாலகம் வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கு 'நீட்', ஜே.இ.இ., பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.சிறந்த கட்டமைப்பு வசதிகள், ஜி.பி.எஸ்., வசதியுடன், இல்லம் தேடி வரும் பேருந்துகள், ஆரோக்கியமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. சாரணர் இயக்கம், நீச்சல், யோகா, கராத்தே, விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி, இசை, நடனப் பயிற்சி, ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.ஒலிம்பியாட் தேர்வு, இந்தி தேர்வு, சகோதயா போட்டிக்கு சிறப்புப் பயிற்சி, கற்றல் குறைபாட்டை நீக்க கூடுதல் பயிற்சி, மாதம் ஒருமுறை களப்பயணம் என, மாணவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை