உலக தடுப்பூசி தினம் கொண்டாட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் கோவை அபிராமி செவிலியர் கல்லுாரி சார்பில், உலக தடுப்பூசி தினம் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து, பிரிவு தலைவர் டாக்டர் செல்வராஜ் செவிலியர் கண்காணிப்பாளர்கள், நல பிரிவு டாக்டர்கள், குழந்தைகள் நலப் பிரிவு செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். செவிலியர் கல்லுாரி மாணவியர், நாடகம், பேச்சுப்போட்டி மற்றும் பல நிகழ்ச்சிகள் வாயிலாக தடுப்பூசியின் அவசியம், தடுப்பூசி போடாவிட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும் என, நடித்து விளக்கமளித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர், எந்த நோய்களும், தடுப்பூசி வாயிலாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாதத்தில் என்ன நோய்கள் தடுப்பூசி போட வேண்டும், எங்கே தடுப்பூசி போட வேண்டும் என்று விளக்கம் அளித்தார். செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் தடுப்பூசி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.