மேலும் செய்திகள்
குழந்தைகளிடம் அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்
05-Oct-2025
மு தியோர் கீழே விழுவதை தவிர்க்க, படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நடந்து விடாமல், சில நிமிடங்கள் அமர்ந்து, பின் எழுந்து நின்று, அதன் பின்னரே நடக்க வேண்டும் என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் அசோகன். அவர் கூறியதாவது: முதுமையில் உடல், மனம் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்க வேண்டும். அதில் பொதுவான ஒரு பிரச்னை கீழே விழுவது; புள்ளிவிபரங்களின்படி, 65 வயதுக்கு மேல் உள்ள, மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை கீழே விழுகின்றனர். சற்று கவனமாக இருந்தால் இதனை தடுக்க இயலும். தினசரி சமநிலை பயிற்சி என்பது அவசியம். இரவு நேரத்தில் முதியோர் பயன்பாட்டு இடங்களில் வெளிச்சம் இருக்க வேண்டும். எழும்போது, உடனடியாக நடக்காமல் சற்று அமர்ந்து பின்னர் எழுந்து நிற்க வேண்டும். அதன் பின்தான் நடக்க வேண்டும். கட்டாயம் கண் பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும். எலும்பு வலிமைக்கு கால்சியம், வைட்டமின் மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். முதியோர் அமரும் நாற்காலி, கட்டிலின் உயரம் சரியாக இருப்பதை கவனிக்க வேண்டும். அதிக உயரம் அல்லது மிக குறைவான உயரம் இருப்பின், எழுந்து, அமர சிரமம் இருக்கும். துாக்கமின்மைக்கு டாக்டர் பரிந்துரை இன்றி, மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. ரத்தசோகை, குறைந்த சர்க்கரை அளவு காரணமாக மயக்கம் ஏற்படும். இதனை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நீர்க் குறைவாலும் மயக்கம் ஏற்படும்; இதை தவிர்க்க, தாகம் இல்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
05-Oct-2025