உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழ்ச் சங்க விழாவில் தமிழமுதம் பருக வாரீர்

 தமிழ்ச் சங்க விழாவில் தமிழமுதம் பருக வாரீர்

கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில் வரும் 14ம் தேதி, தமிழ்ச் சங்க விழா நடைபெறுகிறது. கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கிய சொற்பொழிவு வரும் 14ம் தேதி காலை 9:30 மணிக்கு, சர்க்கார் சாமக்குளம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரி, பணி நிறைவு பேராசிரியர் சாந்தாமணி தலைமை வகித்து பேசுகிறார். 'படித்ததில் பிடித்தது' எனும் தலைப்பில், தமிழாசிரியை ராதா பேசுகிறார். 'தமிழின் சிறப்பு' என்னும் தலைப்பில் சூர்யா பேசுகிறார். 'பார்க்க வருகிறார் பாரதி' என்னும் தலைப்பில் சுந்தரவடிவேலு, 'அறிவோம் ஒரு அரிய செய்தி' என்னும் தலைப்பில், அனுராதா ஆகியோர் பேசுகின்றனர். பெரியபுராண நாயன்மார்களை நினைவு கூர்ந்து, புலவர் ராமலிங்கம் தலைமையில் பேச்சரங்கம் நடக்கிறது. ஓய்வு பெற்ற பேராசிரியர் சூரியநாராயணன், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பேசுகின்றனர். பொதுமக்கள் விழாவில் பங்கேற்று, தமிழமுதம் பருக சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ