உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ரேபிஸ் தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

கோவையில் ரேபிஸ் தாக்கி இளம்பெண் மரணம்; தெரு நாய் கடித்ததால் நேர்ந்த சோகம்

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், தெரு நாய்கள் வீதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.இந்நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி எல்.ஜி.பி., நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், மூன்று மாதங்களுக்கு முன், அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களுக்கு உணவளித்தார். அப்போது, சண்டையிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்களில் ஒன்று, அந்த இளம்பெண்ணை கடித்து விட்டது. அவர், 'ரேபிஸ்' நோய்க்கான ஊசி போடாமல் விட்டு விட்டார். இதனால் அவரை, 'ரேபிஸ்' நோய் தாக்கியது.இதை, தாமதமாகவே உணர்ந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GoK
அக் 12, 2024 18:52

நாய்களும் ஒரு உயிரினம்தான் ஆனால் நகராட்சி நிறுவனங்கள் அவற்றை முறைப்படி கவனித்தால் இந்த மாதிரி நிகழ்வுகளை தவிர்க்கலாம் ஆனால் எங்கே ஊழல் செய்யவே நேரம் செரியா இருக்கே


ஸ்ரீ ராஜ்
அக் 12, 2024 16:01

தமிழக அரசு மீது தவறு இல்லை என்று சொல்லாமல் அப்பெண் மீது பழி போடும் கேவலமான பதிவு. - 1 அப்பெண் உணவிட்டார், 2 அப்பொழுது நாய்களுக்குள் நடந்த சண்டையில் கடித்தது, 3 அப்பெண் அதை கவனத்தில் கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 4 கடைசியாக கவனிக்காமல், கடைசி கட்டத்தில் 5 தனியார் மருத்துவ மனையில் இறந்தார். இப்படி எல்லாம் மற்றவர்களை குறை சொல்லி எழுதுவது மிகவும் வருந்தத்தக்கது.


Ms Mahadevan Mahadevan
அக் 12, 2024 14:10

தமிழ்நாடு பூராவும் இதே நிலைமைதான். அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கட்டுப்பாடுகள் வேண்டும். தெரு நாய்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்


Sumathi Sivasankar
அக் 12, 2024 08:01

வார்டு 52 hudக்கோ காலனி நாய்களை பிடிக்க எவ்ளவு சொலியும் பிடிக்காமல் வண்டியில் செலவோரை கடிக்க வருகிறது. இதற்கு வழி என்ன. நாய் கடித்து சாக வேண்டுமா.மாநராசி ஒன்றும் செய்வதாய் இல்லை. வாழ்க வளமுடன்


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2024 06:18

இது போன்று கடிக்கும் மனநிலையை கொண்ட நாய்களை பற்றி கம்பளைண்ட் செய்வது எங்கே , எப்படி என்று ஒரு கட்டுரை வெளியிடுமா தினமலர் ?


முக்கிய வீடியோ