மேலும் செய்திகள்
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டம்; அச்சத்தில் மக்கள்!
05-Apr-2025
மேட்டுப்பாளையம் 'கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வேடர்காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 34. இவர், நேற்று காலை காலைக்கடன் கழிப்பதற்காக சென்ற போது, யானை தாக்கியது. இதில், அவருக்கு முகத்தில் காயம் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, யானையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.பின், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வனத்துறையினரால் யானை நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.----
05-Apr-2025