மேலும் செய்திகள்
பண மோசடியில் ஈடுபட்ட கேரள நபர்கள் மூவர் கைது
18-May-2025
கோவை; ஆன்லைனின் 'ரிவ்யூ' செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.10.90 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.போத்தனுார், வெள்ளலுாரை சேர்ந்த ஐஸ்வர்யா, 28.இவரது டெலிகிராம் எண்ணுக்கு, கடந்த, 8ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைனில் 'ரிவ்யூ' செய்து பணம் சம்பாதிக்கலாம் குறிப்பிட்டிருந்தது.அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, பிரபல நிறுவனங்கள் குறித்து, 'ரிவ்யூ' செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். மேலும், முன்பணம் செலுத்தி, நிறுவனங்களின் லிஸ்ட்டை பெற்று, 'ரிவ்யூ' செய்தால், ஒரு 'ரிவ்யூ'வுக்கு ரூ. 250க்கு மேல் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, முதற்கட்டமாக சிறிய தொகையை முன்பணமான செலுத்தி பெண் 'ரிவ்யூ' செய்தார். அதற்கான பணத்தை மோசடி நபர்கள் பெண்ணுக்கு அனுப்பினர்.இதை நம்பிய அப்பெண், மே, 8 முதல் 13 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 10.90 லட்சம் பணத்தை மோசடி நபர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பினார்.அதன் பின், ஐஸ்வர்யாவுக்கு எந்த பணமும் வரவில்லை. இதையடுத்து, அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
18-May-2025