உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 23 பவுன் நகையை கைப்பற்றினர்.பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன்புரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 23 பவுன் நகை திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டு நடத்தியது சுந்தராபுரம், முபாரக் அலி, 31, என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 23 பவுன் நகையை கைப்பற்றி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ