உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் கத்தியுடன் சுற்றிய நபரை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் சி.டி.சி., காலனியில், கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக மர்மநபர் கத்தியுடன் சுற்றினார்.அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், பெரியார் காலனியை சேர்ந்த நவாஸ்,25, என்பதும், பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கிலும், அச்சுறுத்தும் வகையிலும் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !