உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலதிபர்களிடம்  பணம் பறித்த  வாலிபருக்கு வலை

தொழிலதிபர்களிடம்  பணம் பறித்த  வாலிபருக்கு வலை

கோவை:சென்னை, மதுரவாயலை சேர்ந்த, 45 வயது தொழிலதிபர், தன் மனைவி, குழந்தைகளை கோவையில் குடி வைத்துள்ளார். வாரம் ஒருமுறை அவர் கோவைக்கு சென்று, வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன் அவரது மொபைல் எண்ணுக்கு, 'பொட்டிம்' என்ற செயலி வாயிலாக ஓர் அழைப்பு வந்தது.அதில் பேசியவர், 'உன் மனைவியை பார்க்க கோவை வரக்கூடாது; வந்தால் கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார். அவர், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, அழைப்பு விடுத்தது, ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என, தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் வருவதை பார்த்த அவர், வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பினார்.போலீசார் கூறுகையில், 'சரவணம்பட்டி தனியார் கல்லுாரியில் ஸ்வீட்சன் பணியாற்றி வருகிறார். இவர், தொழிலதிபர்களின் மனைவியருடன் நெருக்கமாக பழகி, மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன், தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பெற்றுள்ளார்.'உல்லாசமாக வாழ்வதற்காக, இந்த வழியை பயன்படுத்தி வந்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்வோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ